கொழும்பு 06, Havelok City Mall வர்த்தகத் தொகுதியின் முதலாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், அதன் உத்தியோகபூர்வ வங்கிக் கூட்டாளராக இணைந்துள்ள மக்கள் வங்கி, தனது மக்கள் வங்கி கடனட்டைகளுக்கு பல்வேறு பிரத்தியேக தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை வழங்க முன்வந்துள்ளது.
65 வணிக மையங்களில் 50% வரையான தள்ளுபடிகள் கிடைக்கப்பெறுகின்றன. இதை விட, தெரிவு செய்யப்பட்ட வணிக மையங்களில் வட்டியின்றிய, தவணைக் கொடுப்பனவுச் சலுகைகள் கிடைக்கப்பெறுகின்றன.
இந்த வர்த்தகத் தொகுதியில் மக்கள் வங்கியின் கருமபீடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதுடன், இந்த ஊக்குவிப்பு நிகழ்வு வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. புதிதாக விண்ணப்பிக்கின்ற கடனட்டைகளுக்கு முதலாவது ஆண்டுக்கான கட்டணத்திற்கு விலக்களிக்கப்பட்டுள்ளதுடன், இக்காலப்பகுதியில் பெற்றுக்கொள்ளும் மக்கள் வங்கி கடனட்டைகளுக்கு இணைவதற்கான கட்டணம் மற்றும் வருடாந்த கட்டணத்திற்கும் விலக்களிக்கப்பட்டுள்ளது.