இலங்கையிலுள்ள முன்னணி பல்துறை கூட்டு நிறுவனமான DIMO நிறுவனத்தின் சுகாதாரப் பிரிவும் ZEISS வர்த்தகநாமத்திற்கான இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட முகவருமான DIMO Healthcare நிறுவனம், அண்மையில் Lanka hospitals மருத்துவமனையில் ZEISS KINEVO 900 சாதனத்தை நிறுவியது.
துல்லியம் மற்றும் செயல்திறன் மூலம் மருத்துவமனையின் அறுவை சிகிச்சைத் துறை சேவைகளை மேலும் மேம்படுத்துவதே ZEISS KINEVO 900 சாதன நிறுவலின் முதன்மையான நோக்கமாகும். உயர்தர புகைப்படங்களை வழங்குவதன் மூலம், இந்த தனித்துவமான ZEISS KINEVO 900 சாதனமானது, தெளிவான முப்பரிமாண புகைப்படங்களை காண்பிப்பதோடு, அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் அதன் ஆதரவுக் குழுக்களுக்கு எவ்வித இடையூறுமின்றி தெளிவான புரிதலைப் பெறவும் துல்லியமாக அறுவை சிகிச்சை செய்யவும் உதவுகிறது.
இது தொடர்பில் Lanka Hospitals மருத்துவமனையின் சத்திரசிகிச்சை பிரிவின் தலைவர் வைத்தியர் தேவிகா கஸ்தூரியாராச்சி கருத்துத் தெரிவிக்கையில் , “ZEISS KINEVO 900 சாதனத்தின் நிறுவலானது, நரம்பியல் அறுவை சிகிச்சைத் துறையின் வசதிகளை மேம்படுத்த உதவும். இந்த புதிய தொழில்நுட்பமானது, எமது அறுவை சிகிச்சைக் குழுக்களுக்கு மிகவும் நுட்பமான செயற்பாடுகளை கூட துல்லியமாக மேற்கொள்ள உதவும் என நாம் எதிர்பார்க்கிறோம். இதன் மூலம் இலங்கையில் மருத்துவ பராமரிப்பு சேவை மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சை தரத்தை மேம்படுத்துவது தொடர்பான எமது அர்ப்பணிப்பு தெளிவாகக் காட்டப்படுகிறது.