இன்றைய உலகில் புற்றுநோய் கணிசமானதொரு சுகாதார பிரச்சினையாக மாறியுள்ளது. இன்றளவில் இலங்கையில் வருடாந்தம் 30,000 க்கும் மேற்பட்ட புற்று நோயாளர்கள் அடையாளங் காணப்படுகின்ற சூழலில் நோயின் தாக்கம் எந்தளவு தீவிரமடைந்துள்ளதென்பதை உணர முடிகிறது. புற்று நோயாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதானது, நோயாளர்களுக்கு மாத்திரமின்றி அவர்களின் குடும்ப அங்கத்தவர்களுக்கும் நிதி ரீதியாகவும் உள ரீதியாகவும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் போது பாதிக்கப்படுகின்ற குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஏற்படுகின்ற உளத் தாக்கங்கள், குடும்பப் பொறுப்புகள் அதிகரிக்கின்றமை மற்றும் ஏற்படக்கூடிய பொருளாதார நெருக்கடிகள் காரணமாக அவர்களின் கல்வியிலும் சரிவை ஏற்படுத்துகின்ற பல்வேறு சந்தர்ப்பங்களை அவதானிக்க முடிகிறது. அந்த வகையில் மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கின்ற, வாழ்க்கையின் திருப்புமுனையாக கருதப்படுகின்ற உயர் தரப்பரீட்சைக்கு அவர்களை ஊக்குவித்து அவர்களின் எதிர்காலத்தை ஒளிமயமாக்குவதை நோக்கமாக கொண்டு தமது Vernolac உற்பத்தியில் கிடைக்கும் இலாபத்தை ஈடுபடுத்துவதற்கு Fadna நிறுவனம் தீர்மானித்துள்ளது.
“Fadna Vernolac எதிர்பார்ப்பு புலமைப்பரிசில் திட்டம்” எனப் பெயரிடப்பட்டுள்ள அதன் ஒத்துழைப்பு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்ற நிலையில் புலமைப் பரிசில் வழங்கும் முதல் கட்டம் அண்மையில் Fadna நிறுவனத்தின் தலைமையிலும் மொரட்டுவை நியூ horizon லயன்ஸ் கழகத்தின் ஒத்துழைப்புடனும் கங்காராம ரஜமகா விஹாரையில் சர்வமதத் தலைவர்களின் முன்னிலையில் நடைபெற்றது.