Sun Siyam பாசிகுடா சர்வதேச சமையல் நிபுணர் தினக் கொண்டாட்டத்தை 2024 ஒக்டோபர் 20 ஆம் திகதி முன்னெடுத்திருந்தது. இந்த விசேட தினத்தில், ஹோட்டலின் பொது முகாமையாளர் அர்ஷெத் ரிபாய் கொண்டாட்டங்களை வழிநடத்தியிருந்ததுடன், Sun Siyam பாசிகுடாவின் புகழ்பெற்ற பரந்த சமையல் தெரிவுகளை தயாரித்து வழங்கும் சமையல் நிபுணர்களின் சிறந்த பங்களிப்பை கௌரவித்திருந்தார்.
இந்த ஆண்டின் தொனிப்பொருளாக “எதிர்காலத்துக்கு ஆரோக்கியமான உணவு” (“Healthy Food for the Future”) என்பதாக அமைந்திருந்தது. நல்வாழ்வை ஊக்குவிப்பதில், பசுமையான, பரிபூரண சேர்மானங்களை பயன்படுத்துவதன் முக்கியத்துவம் உணர்த்தப்பட்டிருந்தது. Sun Siyam பாசிகுடா தனது ஒவ்வொரு உணவு வகையிலும் இந்தக் கொள்கையை பின்பற்றி ஊக்குவிக்கின்றது. இந்த தொனிப்பொருளின் நோக்குக்கமைய, இலங்கையின் பரந்தளவு சுவைகளை பிரதிபலிக்கும் உணவு வகைகளை வடிவமைத்திருந்ததுடன், அதில் உள்நாட்டிலிருந்து பெறப்பட்ட சேர்மானங்கள், நிலைபேறாண்மை மற்றும் ஆரோக்கியம் போன்றவற்றுக்கு முக்கியத்துவமளித்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து விறுவிறுப்பான கேக் கலவை நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது, இதில் ஹோட்டலின் விருந்தினர்களும் இணைந்து கொண்டாட்டத்தில் பங்கேற்றிருந்தனர். உலர் பழங்கள், வாசனைத் திரவியங்கள் மற்றும் ஸ்பிரிட் வகைகள் அடங்கலாக பெருமளவு பசுமையான சேர்மானங்களை கொண்டு இந்த கலவை தயாரிப்பு முன்னெடுக்கப்பட்டது.