ஒக்டோபர் 8 ஆம் திகதி கொண்டாடப்பட்ட தேசிய ஓய்வூதியர் தினத்தில், இலங்கை முழுவதிலும் உள்ள அனைத்து ஓய்வூதியர்களுக்கும் எமது தாய்நாட்டிற்கான அவர்களது அயராத அர்ப்பணிப்பு மற்றும் பங்களிப்புக்காக தேசிய அபிவிருத்தி வங்கி PLC (NDB) தனது மனமார்ந்த நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துள்ளது. தேசத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் அவர்களது வாழ்க்கையின் முதன்மையான ஆண்டுகளை அர்ப்பணித்துள்ள நிலையில், நாட்டின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்கான அவர்களது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு,
அனைவருக்கும் உத்வேகமாக தொடர்ந்து சேவை செய்ய வழிவகுக்கிறது. அவர்களது நீடித்த மரபை அங்கீகரித்து, அவர்களது நல்வாழ்வை ஆதரிப்பதற்காக, NDBயின் அர்ப்பணிப்புள்ள நிதி வழங்கல் திட்டமான, NDB ஆச்சாரா கடன் திட்டமானது,
இலங்கையில் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு வசதியான மற்றும் பாதுகாப்பான ஓய்வு காலத்திற்குத் தேவையான ஆதரவை வழங்குகிறது. சிறப்பாக வடிவமைக்கப்பட்ட இக்கடன் திட்டமானது ஓய்வூதியர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும்,
அவர்களின் பல ஆண்டு கால குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை அங்கீகரிப்பதற்குமான NDB இன் அர்ப்பணிப்பான செயற்பாட்டை பிரதிபலிக்கிறது.
NDB ஆச்சாரா கடன் திட்டமானது, இயலக்கூடிய மாதாந்த கொடுப்பனவுகளை உறுதி செய்யும் வகையில் அதிகபட்ச வயது வரம்பு 75 ஆண்டுகளுக்கு உட்பட்டு 15 ஆண்டுகள் திருப்பிச் செலுத்தும் காலத்துடன் அதிகபட்சமாக 4.5 மில்லியன் ரூபா கடன் தொகையை வழங்குகிறது.