45
திசையின் விடியல்
திடமாக அமைய
திவ்விய ஒளி
தேசமெங்கும் பரவ
திண்ணமான கொள்கைகள்
திரையின்றிப் பெருக
தீமைகள் அறுந்து
தூய்மை நிலைபெற
தாங்கிய துயரங்கள் மீண்டும்
தரிக்காமல் தூரமாக
தாகித்த நெஞ்சங்களில்
தயவாட்சி அமைதிதர
தரமான மாற்றத்தில்
தாயகம் அருள் பெற
திருத்தங்கள் அமைந்து
தம்மக்கள் செழிக்க
தலைமைத்துவம் நேராகித்
தூரநோக்கு திறம்பட
திக்கெங்கும் நிறைந்திருக்கும்
தேவைகள் நிரப்பமாக
திருப்பங்களில் திருப்தியுற்று
தேடல்கள் வெற்றிபெற
தலைவர்க்கெலாம்
தலையாய தலைவன்
அல்லாஹ்வை
தன்னிகரில்லா
அருளாளன் அவனை
துதித்திறைஞ்சித்
துஆ செய்வோம்