Home » அவள் வீசிய காதலன்….

அவள் வீசிய காதலன்….

by Damith Pushpika
October 20, 2024 6:51 am 0 comment

காத்திருந்து களவு
கொடுத்த கல்லறைக்
காதலன் நான்.

பத்திரமாக பார்த்துக்
கொண்ட நினைவு
பக்குவமாய் கூறி
போகிறது பத்தினி
அவள் எனது
காதலி என்பதால்
ஏமாற்றத்தோடு நிறைந்த
வலிகள் உனதென்று.

அன்பாக பேசிய
வார்த்தைகள் கானல்
நீராய் கரைந்து
போனது ஏனோ,
பத்திரமாக பார்த்துக்
கொண்ட காதலென்பதாலா
எனத் தெரியாது.
பாசமாய் பேசினால்
பாவமெனப் பார்க்காது
பாவியென வீசினால்
காதலோடு சேர்ந்து
என் நினைவுகளையும்
இன்று.

ஞாபக மறதியால்
பேசியிருப்பாலென நினைத்தேன்
அன்று தான்
தெரிந்தது ஞாபகத்தில்
இல்லாதவனாய் நானிருக்கிறேன்
என்று அவளிடத்தில்.

ஏனோ அவளிடத்தில்
என் ஞாபகமும்
என் வார்த்தைகளும்
மௌனம் நிறைந்த
வார்த்தைகளாய் போனது.

இருந்தும் பரவாயில்லை
அவள் எனக்கான
காதல் என்பதால்
எனக்கான வாழ்வினையும்
சேர்த்து அழகாய்
வாழ்ந்திட எனது
பிரார்த்தனைகளும்
அவளிடத்தில்.

பொத்துவில் அஜ்மல்கான்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Sajeewan Prasad – 0777861202
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division