48
யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்ட மயில்வாகனம் நிமலராஜனின் 24ஆம் ஆண்டு நினைவுதினம் நேற்று யாழ். ஊடக அமையத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ். ஊடக அமையத் தலைவர் கு.செல்வகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நிமலராஜனின் உருவப்படத்துக்கு மலர்மாலை அணிவித்து, சுடர் ஏற்றி, மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
போர் சூழல் நிலவிய காலப்பகுதியில் யாழ்ப்பாணத்திலிருந்து ஊடக பணியாற்றிய இவர், பி.பி.சி.யின் தமிழ் மற்றும் சிங்கள சேவைகள், வீரகேசரி, ராவய போன்ற ஊடகங்களுக்கும் பணியாற்றியிருந்தார். 2000ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி துப்பாக்கி பிரயோகத்தில் இவர் உயிரிழந்திருந்தார்.
யாழ். விசேட நிருபர்