Home » ஊழல், இனவாத அரசியல்வாதிகள் அரசியலில் இருந்து ஒதுங்குவது அநுர ஜனாதிபதியாவதற்கு கிடைத்த வெற்றி

ஊழல், இனவாத அரசியல்வாதிகள் அரசியலில் இருந்து ஒதுங்குவது அநுர ஜனாதிபதியாவதற்கு கிடைத்த வெற்றி

பிமல் ரத்நாயக்க

by Damith Pushpika
October 13, 2024 8:15 am 0 comment

ஊழல் அரசியல்வாதிகள் அரசியலிலிருந்து ஒதுங்குவது அநுர குமார திசநாயக்க ஜனாதிபதியானதற்கு கிடைத்த வெற்றியென தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தோல்வியிலிருந்து தப்புவதற்காக ஊழல் மற்றும் இனவாத அரசியல்வாதிகள் இந்த முறை தேர்தலில் போட்டியிடுவதை தவிர்த்துக்கொண்டுள்ளதாக தெரிவித்த அவர்,

அடுத்த தேர்தலில் அவ்வாறான அரசியல்வாதிகள் வேட்பாளர்களாக நிற்காத நிலையை ஏற்படுத்தியமை பொதுத் தேர்தலுக்கு முன்னர் தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்த பெரு வெற்றியென தெரிவித்துள்ளார்.

அநுர குமாரவை ஜனாதிபதியாக தெரிவு செய்யதமைக்காக மக்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும், இது இறுதியில் ஊழல் இனவாத அரசியல்வாதிகளின் அரசியல் வாழ்க்கையை முடித்து வைத்ததென அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் அநுர குமாரவுக்கு வாக்களித்தன் மூலம் மக்கள் சிறந்த செயலை செய்தனர். இது இறுதியில் ஊழல் அரசியல்வாதிகளை அகற்றியது.

தோல்வியை தவிர்ப்பதற்காக இந்த அரசியல்வாதிகள் தேர்தலில் போட்டியிடுவதை தவிர்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Sajeewan Prasad – 0777861202
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division