100
இலங்கை தமிழரசுக் கட்சியின் ஜனநாயக பிரிவினருக்கு முன்னாள் தலைவர் மாவை சேனாதிராசா தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
மாம்பழச் சின்னத்தில் போட்டியிடும் கே.வி.தவராசா தலைமையிலான அணியினர் நேற்று முன்தினம் மாலை மாவை சேனாதிராஜாவை அவரது வீட்டில் சந்தித்து மாம்பழம் வழங்கி ஆதரவைக் கோரினர். இலங்கை தமிழரசு கட்சியிலிருந்து திட்டமிட்ட முறையில் ஓரங்கட்டபட்டவர்கள் மற்றும் ஈழ தேசிய கட்சிகள் இணைந்து உருவாக்கப்பட்ட ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பினர் வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் இவ்வாறு மாவை சேனாதிராஜாவை சந்தித்தனர்.