தற்போதைய அரசியல் கள நிலையில் தமிழ் மக்கள் சார்ந்த கட்சிகளின் சின்னங்கள் சிதைந்துள்ள ஒரு இக்கட்டான காலகட்டத்தில் தமிழர்களின் மிக நீண்டகால வரலாற்றுப் பாரம்பரிய சின்னமாகிய உதயசூரியன் சின்னத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி இம்முறை வடக்கு, கிழக்கில் ஐந்து மாவட்டங்களிலும் தனித்துப் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்துள்ளது. வேட்பாளர் பட்டியல்களில் அரசியலில் அனுபவம் கொண்ட இளைய சமுதாயத்தினருக்கு முக்கிய இடமளிக்கப்பட்டுள்ளது. இம்முறை தமிழ் மக்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்துக்கு ஆதரவை வழங்க வேண்டுமென்று கட்சியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி கேட்டுக்கொண்டுள்ளார்.
இளம் தலைமுறையினரின் பங்களிப்புடன்
தமிழரின் பாரம்பரிய கட்சி மீண்டும் அரசியல் களத்தில்
வடக்கு, கிழக்கில் உதயசூரியன்
41
previous post