உச்சம் தலையில் இருந்து
உள்ளம் கால்வரை
இதயத்தோடு
இறுகிப்பிடித்துக் கொண்டு..
கண்ணீரும் உறங்காவிழிகளும் என
ஆழ்ந்த சிந்தனையில்
உயிர் தாக்குப்பிடித்துக்
கொண்டு இருக்கும்..
இரண்டாம் நாள்
சற்று கண்ணீர் ஓய்வாகி
உள்ளத்து வலியில்
அமைதியின் தியானத்தில்
உருக்கிக்கொண்டிருக்கும்..
மூன்றாம் நாள்
எல்லாம் கடந்து விட
வேண்டும் என்ற
மனநிலையில் கொஞ்சம்
கொஞ்சமாக
மனதை தைரியப்படுத்தி
மனவலியில் இருக்கும்..
ஒரு வாரம்
ஒரு மாதம்
என நாட்கள் நகர
எல்லா நினைவுகளையும்
மனதில் சுமந்து கொண்டு
தன் வேலைகளோடு இருக்கும்
அவ்வப்போது
நினைவுகள் மனதில் எழும்
தருணத்தில்
தனக்கு தெரியாமலே
கண்ணீரோடு அழுது
தீர்த்து விடுவோம்
எப்படியும் ஒரு மனிதன்
நம்மோடு வாழ்ந்தற்கான
நினைவுகள்
நாம் மரணிக்கும் வரை
நம்மோடு ஏதோவொரு வகையில்
உள்ளத்திலும் உணர்வுகளிலும்
சிந்தனைகளிலும் சூழலிலும்
ஒருதுளியாவது
சஞ்சரித்துக்கொண்டே இருக்கும்
இவ்வுலக வாழ்வில்
உணர்வுகளோடுதான்
மனிதன் அதிகம்
வாழ்ந்து கொண்டு இருக்கிறான்