பாடசாலை மாணவர்கள், தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் சனி, ஞாயிறு மற்றும் ஏனைய அனைத்து விடுமுறை நாட்களிலும் மாதாந்த பருவச்சீட்டை பயன்படுத்தி பஸ்களில் தடையின்றி பயணிக்க அனுமதிக்குமாறு போக்குவரத்து சபைத் தலைவருக்கு போக்குவரத்து அமைச்சர் விஜித ஹேரத் பணிப்புரை விடுத்துள்ளார்.
விடுமுறை நாட்களில் மாணவர்கள் மேற்கொள்கின்ற போக்குவரத்தின் போது பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்வதாக கிடைக்கப்பெற்றுள்ள பல முறைப்பாடுகளை கருத்தில் கொண்டு, அதற்கான ஒரு தீர்வாக மாதாந்த பருவச்சீட்டை பயன்படுத்தி அம்மாதம் முழுவதும் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு உரித்தான பஸ்களில் பயணிப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை உடனடியாக மேற்கொள்ளுமாறும் போக்குவரத்துச் சபையின் தலைவருக்கு அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.