கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் காணப்படும் ஆபத்தான மரங்களை அடையாளம் கண்டு அவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, கொழும்பு மாநகர சபையின் ஆணையாளர் பத்ராணி ஜயவர்த்தன தெரிவித்தார். ஆபத்தான மரங்களை அடையாளம் கண்டு அவற்றை அகற்ற கொழும்பு மாநகர சபையின் மூன்று விசேட குழுக்கள் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
ஒரு மரம் ஆபத்தானதா? இல்லையா? என 100 சதவீதம் உறுதிப்படுத்துவதற்கு எந்த உபகரணங்களும் இல்லை. கொழும்பு நகரத்திலுள்ள மரங்கள் ஆபத்தானதாக மாறுவதற்கு பல காரணங்கள் உள்ளன. இதனால் மரங்களை பராமரிப்பது மிகவும் அவசியமாகும். எனவே உங்களது பிரதேசங்களில் காணப்படும் ஆபத்தான மரங்கள் தொடர்பில் அறிவிப்பதற்கு கொழும்பு மாநகர சபையின் 110 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்பு கொள்ளலாம்.