63
யாழ்ப்பாணத்தில் தனியார் தொலைக்காட்சி ஊடகவியலாளர் ஒருவர் மீது அடையாளம் தெரியாத இருவர் தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் நேற்று முன்தினம் மாலை (11) இடம்பெற்றுள்ளது. ஊடகவியலாளர் தனது பணி முடிந்து வீடு திரும்பும் போது கஸ்தூரியார் வீதியில் வைத்து தாக்கப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், தலைக்கவசத்தினால் ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
யாழ். விசேட நிருபர்