இலங்கையின் முன்னணி சூரிய வலுத் தீர்வுகளை வழங்கும் E.B. Creasy Solar, தனது புதிய சூரிய வலு தீர்வுகள் நிலையத்தை செப்டெம்பர் 6ஆம் திகதி வெல்லவாயவில் திறந்துள்ளது. இந்த நிலையத்தில் பரந்தளவு சூரிய வலுத் தீர்வுகள் கிடைப்பதுடன், இதில் நிலை 1 சூரிய படல்கள் மற்றும் LONGI, AE Solar, Thornova, LORENTZ Solar Water Pumps மற்றும் உலகின் முதல் தர இன்வேர்டர் வர்த்தக நாமமான SUNGROW ஆகியவற்றின் தொழில்நுட்பம் ஆகியவற்றை பெற்றுக் கொள்ள முடியும். E.B. Creasy Solar தயாரிப்புத் தெரிவுகள் உயர் வினைத்திறன் மற்றும் நீடித்த பாவனையை கொண்டதாக அமைந்துள்ளன. E.B. Creasy Solar இனால் புத்தாக்கமான சூரிய வலுத் தொழில்நுட்பங்கள் வழங்கப்படுவது மாத்திரமன்றி, நம்பிக்கை மற்றும் நீண்ட கால வாடிக்கையாளர் தன்னிறைவை உறுதி செய்யும் வகையில் பரிபூரண விற்பனைக்கு பிந்திய ஆதரவையும் வழங்குகின்றது.
146 வருட கால நம்பிக்கையை வென்ற E.B. Creasy & Co. PLC இன் புதுப்பிக்கத்தக்க வலுப் பிரிவாக E.B. Creasy Solar இயங்குகின்றது. Darley Butler இன் துணை நிறுவனமாக அமைந்திருப்பதுடன், தூய வலுவில் முதலீடுகளுக்கு வலுவூட்ட E.B. Creasy Solar தன்னை அர்ப்பணித்துள்ளது. அதனூடாக சூழல்சார் வழிகாட்டல் மற்றும் நிலைபேறான எதிர்காலத்தையும் உறுதி செய்கின்றது.