தனது தகவல் பாதுகாப்பு முகாமைத்துவ கட்டமைப்பிற்காக பெருமதிப்புமிக்க சான்று அங்கீகாரத்தைப் பெற்றுள்ள முதலாவது உள்நாட்டு, கட்டமைப்புரீதியாக முக்கியமான வங்கி மற்றும் இலங்கையிலுள்ள அரச வங்கியாக மாறியுள்ளது குறித்து மக்கள் வங்கி பெரும் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது. தனது வாடிக்கையாளர்கள், தொடர்புபட்ட தரப்பினர் மற்றும் ஒட்டுமொத்த வங்கித் துறைக்காக, தரவுக் காப்பு, பாதுகாப்பு மற்றும் நம்பிக்கை குறித்த உயர் தராதரங்களைப் பேணுவதில் மக்கள் வங்கியின் அர்ப்பணிப்பை இந்த முக்கியமான சாதனை மைல்கல் காண்பிக்கின்றது.
தகவல் பாதுகாப்பு முகாமைத்துவம் தொடர்பில் அதிநவீன சர்வதேச தராதரத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றது. இந்த சான்று அங்கீகாரத்தை சம்பாதித்துள்ளதன் மூலமாக, பரிமாண மாற்றம் கண்டு வருகின்ற இணைய ஆபத்துக்களிலிருந்து பெறுமதிமிக்க தனது தகவல் சொத்துக்களைப் பாதுகாக்கும் வலுவான பாதுகாப்பு கட்டுப்பாட்டு நடைமுறைகளை அமுல்படுத்தும் தனது ஆற்றலை மக்கள் வங்கி நிரூபித்துள்ளது. வங்கியின் பாதுகாப்புக் கட்டுப்பாடுகள், தொழில்நுட்ப உட்கட்டமைப்பு, கொள்கைகள் மற்றும் நடைமுறைகள் குறித்த விரிவான மதிப்பீட்டின் அடிப்படையில் இச்சான்று அங்கீகாரம் வழங்கப்படும் நிலையில், தகவல் பாதுகாப்பு மீது அதன் வலுவான அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது.
மக்கள் வங்கியின் பிரதம தகவல் அதிகாரி தம்மிக தாச இது குறித்து கருத்து வெளியிடுகையில், “சர்வதேசரீதியாக அங்கீகரிக்கப்படுகின்ற இச்சான்று அங்கீகாரத்தை சம்பாதித்துள்ள இலங்கையின் முதலாவது உள்நாட்டு, கட்டமைப்புரீதியாக முக்கியமான வங்கியாக மாறியுள்ளமை எமக்கு மிகுந்த கௌரவமளிக்கின்றது.