இலங்கையின் முன்னணி சானிட்டரி நாப்கின் வர்த்தகநாமமான ஈவா, கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பொலிஸுடன் இணைந்து ‘மகஹருனு பாடம்’ என்ற தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் ‘ஈவா தனமுத்து தரு – தனகெனம லொகுவேமு’ என்ற தலைப்பில் மாற்றியமைக்கும் கல்வி முயற்சியை தொடங்கியுள்ளது. ‘ஈவா தனமுத்து தரு – தனகெனம லொகுவேமு’ முயற்சியானது, நாடெங்கும் உள்ள 3,000க்கும் மேற்பட்ட பெண்கள் பாடசாலைகளில் பெண்களின் ஆரோக்கியம், பருவமடைதல், இனப்பெருக்க ஆரோக்கியம் மற்றும் மாதவிடாய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு ஒக்டோபர் 1 ஆம் திகதி ‘மகஹருனு பாடம்’ நிகழ்ச்சியின் ஆரம்பவிழா, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கல்வி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் இலங்கை பொலிஸின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இந்த முயற்சியானது பெரும்பாலும் களங்கம் மற்றும் போலியான தகவல்களால் சூழப்பட்ட கல்வித்துறையிலுள்ள பகுதிகள் பற்றிய இடைவெளிகளை நிரப்ப வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த முயற்சியில் ஈவாவின் ஈடுபாடு, கல்வியின் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளை வலுப்படுத்தல் மற்றும் மாதவிடாய்க் காலத்தில் சாதகமான எண்ணங்களை மேம்படுத்துவதற்கான அதன் நோக்கத்தை பிரதிபலிக்கிறது. இந்த முன்முயற்சியின் ஒரு முக்கிய பகுதியாக, துஷ்பிரயோகத்தை எதிர்கொள்ளும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆதரவாக இலங்கை பொலிஸின் குழந்தைகள் மற்றும் பெண்கள் பணியகத்தால் அவசரத்தொலைபேசி எண் 109 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.