Home » சிறந்த வங்கி பங்குடைமையாளராக கௌரவிக்கப்பட்ட NDB வங்கி

சிறந்த வங்கி பங்குடைமையாளராக கௌரவிக்கப்பட்ட NDB வங்கி

by Damith Pushpika
October 13, 2024 6:45 am 0 comment

ஏசியா ட்ரஸ்ட்டட் லைப் முகவர்கள் மற்றும் ஆலோசகர்கள் விருதுகள் 2024 இல்[Asia Trusted Life Agents & Advisors Awards] NDB-AIA வங்கிக் காப்புறுதி பங்குடைமைக்காக ஆண்டின் சிறந்த வங்கிப் பங்குதாரர் என்ற பெருமைக்குரிய விருது வழங்கப்பட்டமையை AIA ஸ்ரீலங்காவுடன் இணைந்து அறிவிப்பதில் NDB வங்கியானது பெருமிதம் கொள்கிறது. இந்த சர்வதேச கௌரவத்தை இலங்கை பெறுவது இதுவே முதல் தடவை என்பதனால் இந்த அங்கீகாரம் ஒரு வரலாற்று மைல்கல்லைக் குறிக்கிறது.

ஏசியா ட்ரஸ்ட்டட் லைப் முகவர்கள் மற்றும் ஆலோசகர்கள் விருதுகள் நிகழ்வானது ஆசிய காப்புறுதி மதிப்பாய்வு [Asia Insurance Review] ஆசிய ஆலோசகர்கள் வலையமைப்பு [Asia Advisors Network] மற்றும் LIMRA (ஆயுள்காப்புறுதி சந்தைப்படுத்தல் மற்றும் ஆய்வு சங்கம்-The Life Insurance Marketing and Research Association) ஆகியவற்றால் கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்ட, ஆயுள் காப்புறுதி மற்றும் நிதியியல் ஆலோசனைத் துறையில் மிகவும் மதிக்கப்படும் விருதுத் தொடராகும். சிறந்த பிரதம நிறைவேற்று அதிகாரிகள், சிரேஷ்ட நிறைவேற்று உத்தியோகத்தர்கள், தொழில்துறை தலைவர்கள் மற்றும் நிபுணர்கள் அடங்கிய குழுவால் கடுமையான மதிப்பீட்டு செயல்முறை மூலம் வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றமையானது, விருது பெறுபவர்களைத் தேர்ந்தெடுப்பதில் மிகுந்த நம்பகத்தன்மையையும் வெளிப்படைத்தன்மையையும் உறுதி செய்கிறது.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Sajeewan Prasad – 0777861202
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division