வண்ணமயமான சுவரோவியங்களுடன் திறந்தவெளி காட்சியகமாக மாற்றும் வீதியோர கலைப் பிரசாரத்துடன் பெப்சி நிறுவனம் புதிய சின்னத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது தொடர்பான அங்குரார்ப்பண வைபவம் கொழும்பு தாமரை கோபுரத்தில் அண்மையில் இடம்பெற்றது. உள்நாட்டு வெளிநாட்டு கலைஞர்களின் பங்குபற்றுதலுடன் 17 புதுமைமிக்க கலைப்படைப்புக்களுடன் இந்த அறிமுகம் இடம்பெற்றது.
சந்தைப்படுத்தலில் 125 வருட நிறைவை பெப்சி நிறுவனம் தற்போது கொண்டாடுகிறது. இச்சந்தர்ப்பத்தில் அதன் உலகளாவிய பொப் கலாசாரத்தின் மையமாக விளங்கும் வீதியோர கலை வடிவங்களுடன் அதன் சின்னத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. பெப்சி ஸ்ட்ரீட் கலா எனப் பெயரிடப்பட்டுள்ளதன் ஊடாக உலகளவில் முதன்முறையாக பொதுக்கலை மூலம் அதன் புதுப்பிக்கப்பட்ட அடையாளத்தை அறிமுகப்படுத்தியுள்ளமை அதன் அற்புத தருணத்தை பிரதிபலிக்கிறது. நாடு முழுவதும் 17 சுவரோவியங்களுடன், இந்த முன்முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. பெப்சியின் புதிய சின்ன அறிமுக நிகழ்வு அனுபவங்கள் மூலம் அதன் தைரியமான அடையாளத்தை உயிர்ப்பித்தது.
ஆரம்பம் முதல் இறுதி வரை பார்வையாளர்களை கவரும் வகையில் நிகழ்ச்சிகள் அமைந்திருந்தன. இலங்கையில் உள்ள கலைச் சமூகத்தைச் சேர்ந்த செல்வாக்கு மிக்கவர்கள் இதில் பங்குபற்றினர்.
தாமரை கோபுரம் பெப்சியின் புதிய தடித்த நிறங்களுடன் ஒளியூட்டப்பட்டது.
இந்த டைனமிக் லைட்டிங் டிஸ்பிளேயானது தனியார் நிறுவனமொன்று தனது வர்த்தக முத்திரையை கோபுரத்தின் மீது காட்சிப்படுத்தியது இதுவே முதற்தடவையாகும். இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.