ஐக்கிய தேசியக் கட்சியின் திருகோணமலை மாவட்ட தவிசாளராகவும், மூதூர் தொகுதி அமைப்பாளராகவும் முன்னாள் பிரதி அமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியை இராஜினாமா செய்துவிட்டு முன்னாள் ஜனாதிபதி ரணிலுடன் கைகோர்த்துள்ள அவர், ஐக்கிய தேசிய கட்சியின் அங்கத்துவத்தையும் இதன்போது பெற்றுக்கொண்டார். எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் முதன்மை வேட்பாளராகவும் சிலிண்டர் சின்னத்திலும் ரணில் விக்கிரமசிங்க கூட்டணியில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.
அ.இ.ம.காவிலிருந்து வெளியேறிய அப்துல்லாஹ்வுக்கு UNP யில் பதவி
சிலிண்டர் சின்னத்தில் திருமலையில் போட்டி
50
previous post