பாராளுமன்ற உறுப்பினர்களின் மாதி வெல குடியிருப்பில் தங்கியிருக்கும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறவேண்டுமென எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வீடுகளில் அவசர புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளமையினால் பாராளுமன்ற உறுப்பினர்களை குடியிருப்புகளிலிருந்து வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இந்த உத்தரவுக்கமைய, தற்போது ஆறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளியேறியுள்ளதாகவும் கூறப்படுகின்றது. மாதிவெல பாராளுமன்ற உறுப்பினர் உத்தியோகபூர்வ வீட்டுத்தொகுதியில் சுமார் 120 வீடுகள் உள்ளதுடன், எஞ்சிய வீடுகளில் பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்ட அதிகாரிகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மாதிவெல குடியிருப்பு வளாகத்தில் குடியிருப்புகள் வழங்கப்படவுள்ளதால், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.