Home » அலரிமாளிகை சுற்றுவட்ட வீதி பொதுமக்கள் பாவனைக்கு திறப்பு
19 வருடங்களின் பின்னர்

அலரிமாளிகை சுற்றுவட்ட வீதி பொதுமக்கள் பாவனைக்கு திறப்பு

by Damith Pushpika
October 6, 2024 6:45 am 0 comment

அலரி மாளிகை வழியாக ரொட்டுண்டா சுற்றுவட்டத்துக்கு செல்லும் பாதை பொது மக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது. கொள்ளுப்பிட்டி பொலிஸ் எல்லைக்குட்பட்ட ஆர்.ஏ.டி மெல் மாவத்தை, மைக்கல் சுற்றுவட்டத்திலிருந்து பிரதமர் இல்லம் (அலரி மாளிகை) வழியாக ரொட்டுண்டா சுற்றுவட்டம் வரையான பகுதி பாதுகாப்பு காரணங்களுக்காக கடந்த 2005 ஆம் ஆண்டு மூடப்பட்டது.

இந்நிலையில், சுமார் 19 வருடங்களின் பின்னர் பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தலின் பிரகாரம் இந்த வீதி நேற்று முன்தினம் (ஒக்டோபர் 04) பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.

தற்போது, ​​இந்த வீதி பழுது பார்க்கும் பணிகள் நடைபெறுவதால், ஒரு வழி பாதை மட்டுமே வாகன போக்குவரத்துக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. பழுது பார்த்தல் பணிகள் முடிந்தவுடன் இருபுறமும் வாகன போக்குவரத்துக்காக திறக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

ஸாதிக் ஷிஹான்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Sajeewan Prasad – 0777861202
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division