ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்ற நாள் முதல் தான் கொடுத்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றி வருகிறார். தமிழ் மக்களின் அபிலாஷைகள் தொடர்பிலும் அவர் காத்திரமான முடிவை எடுப்பாரென்பது அவரது செயற்பாடுகளிலிருந்து தெரிய வருவதாக தமிழர் தரப்பு பொது வேட்பாளரான ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட பா. அரியநேத்திரன் தெரிவித்தார்.
தினகரன் வாரமஞ்சரிக்கு அவர் வழங்கிய நேர்காணலிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் 05 வருட கால ஆட்சிக்காலத்தில் அவர் தமிழ் மக்களின் பிரச்சினைக்கான காத்திரமான நிரந்தரத் தீர்வை முன்வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இதுவரை இலங்கையை ஆட்சி செய்த எட்டு ஜனாதிபதிகளில் தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முற்றிலும் மாறுபட்டவராக காணப்படுகிறார்.
இவரும் போராட்ட வாழ்விலிருந்து அரசியலுக்கு வந்தவர்தான்.
நாட்டில் நல்லதொரு ஆட்சி அமைய வேண்டும் என்றுதான் ஜே.விபியினர் 1970 களில் போராடினர்.
அது போலவே நாங்களும் போராடினோம். நாங்கள் எங்களுக்கு உரிமைகள் கிடைக்கவில்லையென்றே போராடினோம்.
நாட்டைப் பிரிப்பதற்காக அல்ல. ஒற்றையாட்சிக்குள் தமிழருக்கு சிறந்த தீர்வை அவர் முன்வைப்பார் என்பது அவரது செயற்பாடுகளில் இருந்து தெரியவருகின்றது.
அவ்வாறு அவர் சிறந்ததொரு தீர்வை முன்வைப்பாரானால் தமிழ் பொது வேட்பாளருக்கான தேவை அடுத்த தேர்தலில் இருக்காதென்றும் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
(பா. அரியநேத்திரனுடனான நேர்காணல் 07 ஆம் பக்கம் பார்க்க)
வாசுகி சிவகுமார்