பாராளுமன்ற தேர்தலில் ஊழல், மோசடி குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான எவருக்கும் தனது கட்சியில் வேட்புமனு வழங்கப்பட மாட்டாதென்று ஐக்கிய மக்கள் சக்தி முடிவு செய்துள்ளது.
அரசாங்கத்திடமிருந்து மதுபான உரிமம் அல்லது சலுகைகளை பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள அனைவருக்கும் எதிராக உடனடியாக விசாரணையை ஆரம்பிக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவை அறிவுறுத்தியுள்ளார். இந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் எவருக்கும் வேட்புமனு வழங்கப்பட மாட்டாது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் மதுபான அனுமதிப்பத்திரம் பெற்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ள முன்னாள் எம்.பி.க்கள் மூவருக்கும் வேட்புமனு வழங்குவதில்லையென ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் ஏற்கனவே தீர்மானித்திருந்தார்.