ஏறிவிடுங்கள் கப்பலில்…
சரி திசை சென்று
கரை சேரலாம்…
வந்த திசை அறியாது..
போகும் திசையுமறியாது..
நடுக்கடலில் நங்கூரமாய்
நின்றிருந்த நம் நாட்டை
திசையறிகருவி உதவியுடன்
சரி திசையில் கூட்டிச்செல்ல
திசையறிந்த மாலுமி
வந்துவிட்டார்…
ஏறிவிடுங்கள் கப்பலில்…
சரி திசை சென்று
கரை சேரலாம்…
அடக்குமுறையும்
அவலட்சண அவலங்களும்
ஆட்சியின் உச்சம் தொட்ட
வரலாறு அநுரவின் வெற்றி..
அது அழகிய வெற்றி..
அமைதியான வெற்றி…
அநுர…
அவர்
அடங்கியிருக்கவில்லை…
அறிவோடு திசைதேடினார்..
சரிதிசை வரும்வரை
சாமர்த்தியமாய்
சாதுவாய் இருந்தார்..
குடும்ப அரசியலை
குழிதோண்டிப் புதைத்தார்…
வரட்டு கௌரவத்தை
விரட்டியடித்தார்..
அரசியல்…
அது அடுத்தநொடி மாறலாம்..
ஆட்சிக் கதிரை…
அடுத்தவர் கை மாறலாம்…
அதனால்…
அநுர வருவது அலாவுதீனின்
அற்புத விளக்கோடல்ல..
அடக்கம் செய்த
அருமை நாட்டை….
அழகியநாடாய் மீண்டும்
ஆக்கிவிட
அநுரவாய் நானும்
அநுரவாய் நீயும்
மாறிடனும்….
ஏறிவிடுங்கள் கப்பலில்…
சரி திசை சென்று
கரை சேரலாம்…