வலிகளைக் கொண்டு
எழுதிய வாழ்க்கை
இது என்பதால்
என்னோடு சேர்ந்து
என் உலகமும்
கறுப்பானது.
கனத்த இதயம்
இருந்தாலும் பலத்த
காயங்கள் இருக்கிறது,
ஏனோ தெரியாது
இந்த வலிகளை
தாங்கிக் கொண்டு
இதயம் துடித்துக்
கொண்டுதான் இருக்கிறது.
பரிதாபம் கொண்ட
உறவுகள் பறித்தெடுக்க
நினைக்கின்றார்கள்
மீதமிருக்கும் புன்னகையினை.
அழ நினைத்திருக்கும்
கண்களுக்கு தெரியாது
இது போலி
விம்பங்களென, இருந்தும்
பாசமாய் பார்த்துக்
கொண்டதற்கு பிறகு
ஏனோ தெரியவில்லை
இதுவரை.
வழியினை முடிவுக்கு
கொண்டு வந்த
இவர் வாழ்க்கை
இந்த வலிகளுக்கு
என்றுதான் முடிவு
தர போகிறதோ
என தெரியவில்லை,
முடிவில்லாத பயணம்
காத்திருக்கின்றது என்பதை
உணர்த்தி போகிறது
இந்த காலம்
இன்றுவரை.
இருந்தும் வாழ்ந்திட
நினைத்திருந்தேன்
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
எனக்கான வாழ்வினை.