லேக் ஹவுஸ் (ANCL) நிறுவனத்தின் புதிய தலைவராக காமினி வருஷமான கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். லேக் ஹவுஸ் நிறுவனத்தில் கடந்த 25ஆம் திகதி அவர் உத்தியோகபூர்வமாக தனது கடமையை பொறுப்பேற்றுள்ளார்.
களனி பல்கலைக்கழகத்தில் இளங்கலை விஞ்ஞானப் பட்டதாரியான அவர், லேக் ஹவுஸ் நிறுவனத்தின் சண்டே ஒப்சர்வர் பத்திரிகையின் ஊடகவியலாளராக தனது தொழில் வாழ்க்கையை ஆரம்பித்திருந்தார். பல்வேறு நிறுவனங்களில் ஆய்வாளராகவும் அவர் பணியாற்றியுள்ளார். களனி பல்கலைக்கழகத்தில் வெகுஜன தொடர்பாடலில் முதுமாணி பட்டத்தையும், கொழும்பு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுமாணி பட்டத்தையும் பெற்றுள்ளார்.
அவர், பண்டாரவளை மத்திய கல்லூரியின் பழைய மாணவராவார்.