32
களுத்துறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான குமார வெல்கம தனது 74ஆவது வயதில் நேற்று காலமானார். கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று அதிகாலை காலமானதாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
இறுதிக்கிரியைகள் தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படுமென குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
சுகயீனம் காரணமாக குமார வெல்கமவுக்கு மூன்று மாத கால விடுமுறை வழங்குவதற்கு பாராளுமன்றம் அண்மையில் அங்கீகாரம் வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
1994 ஆம் ஆண்டு முதல் அவர் பாராளுமன்றத்தில் அங்கம் வகித்தமை குறிப்பிடத்தக்கது.