சிங்கப்பூர் ஜனாதிபதி தர்மன் சண்முகரத்தினம் மற்றும் பிரதமர் லோரன்ஸ் வோங் ஆகியோர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு வாழ்த்து தெரிவித்து கடிதமொன்றை எழுதியுள்ளதாக சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி தர்மன் சண்முகரத்தினம் தனது வாழ்த்து கடிதத்தில், நாட்டை முன்னோக்கி வழிநடத்துவதற்கு இலங்கை மக்கள் உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையின் நிரூபணம் இது என்று குறிப்பிட்டுள்ளார். சிங்கப்பூரும் இலங்கையும் நீண்டகால உறவுகளை அனுபவித்து வருகின்றன. இரு நாடுகளின் நெருங்கிய பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மக்கள் உறவுகளால் ஆதரிக்கப்படுகின்றன என்றும் அவர் கூறியுள்ளார். இதேவேளை சிங்கப்பூர் பிரதமரும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.