இலங்கையின் திறமைசாலிகளுக்கு சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட தகைமைகளை வழங்கி பங்களிப்பு வழங்கும் முயற்சிகளின் அங்கமாக, இலங்கையின் முன்னணி தனியார் துறை உயர் கல்வி வலையமைப்பாக திகழும் ESOFT Metro கம்பஸ், LEAP மையத்துடன் இணைந்து, நாடு முழுவதையும் சேர்ந்த 50 மாணவர்களுக்கு ரூ. 55 மில்லியன் பெறுமதியான புலமைப்பரிசில்களை வழங்க முன்வந்துள்ளது.
வியாபார முகாமைத்துவம், தகவல் தொழில்நுட்பம், சட்டம், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் சேவைகள் மற்றும் நிலஅளவையியல் போன்ற பிரிவுகளில் முழுமையான மற்றும் அரைப்பகுதி கற்கைகள் கட்டணத்தை ஈடு செய்யக்கூடிய வகையில் இந்தப் புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டிருந்தன. தமது கற்கை காலப்பகுதியில் தமது கட்டணத்தில் முழுமையான விலக்கழிப்பை இந்த மாணவர்கள் அனுபவிப்பதுடன், அரைப்பங்கு புலமைப்பரிசிலை பெற்றவர்களுக்கு, தமது மொத்த கற்கைச் செலவில் 50 சதவீதத்தை மாத்திரம் செலுத்த வேண்டியிருக்கும்.
மாணவர்களுக்கு தமக்கான தகைமைகளை பெற்றுக் கொள்ள வாய்ப்பளிப்பதுடன், வழங்கப்பட்ட தொகையை வட்டியின்றி மீளச் செலுத்தும் வகையில் இந்தத் திட்டம் அமைந்துள்ளது. தமது கற்கையை பூர்த்தி செய்து ஒரு வருடத்தின் பின்னர் மீளச் செலுத்தலை ஆரம்பிக்கும் நெகிழ்ச்சித்தன்மையை மாணவர் கொண்டிருப்பர். முழுத்தொகையும் மூன்று முதல் ஐந்து வருட காலப்பகுதியினுள் மீளச் செலுத்தப்பட வேண்டும்.