Lanka Network Operators Group (LKNOG) மாநாடு மற்றும் பயிற்சிப் பட்டறைகளின் வெள்ளி அனுசரணையாளராக SLT-MOBITEL இணைந்திருந்தது. கொழும்பு கோல் பேஸ் ஹோட்டலில் அண்மையில் நடைபெற்ற இந்த நிகழ்வு, பிராந்தியத்தின் வலையமைப்பு செயற்பாட்டாளர்கள் மற்றும் நிபுணர்களின் ஒன்றிணைவாக அமைந்திருந்தது.
இந்நிகழ்வுக்கு வெள்ளி அனுசரணையை வழங்கியிருந்ததமையினூடாக, தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத் துறையில் புத்தாக்கம் மற்றும் அறிவு பகிர்வை கட்டியெழுப்புவதில் SLT-MOBITEL கொண்டுள்ள அர்ப்பணிப்பை மேலும் உறுதி செய்திருந்தது. LKNOG உடன் ஈடுபாட்டை பேணி, வலையமைப்பு செயற்பாடுகளின் சிறந்த செயற்பாட்டாளர்களை ஒன்றிணைப்பதில் SLT-MOBITEL பங்களிப்பு வழங்கியிருந்தது.
நிகழ்வின் வெற்றிகரமான செயற்பாட்டில் SLT-MOBITEL இன் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாக அமைந்திருந்ததுடன், பிராந்தியத்தின் முழு வலையமைப்பு சமூகத்துக்கும் அனுகூலமளிப்பதாகவும் அமைந்திருந்தது. LKNOG நிகழ்வில் ஐந்து நாள் நிகழ்வுகள் அடங்கியிருந்தன. இதில் ஒரு நாள் மாநாடு உள்ளடங்கியிருந்ததுடன், பல்வேறு விளக்கங்கள் வழங்கப்பட்டிருந்தன. மேலும் நான்கு நாட்களுக்கு பயிற்சிப்பட்டறைகள் மூன்று கட்டமைப்புகளில் முன்னெடுக்கப்பட்டிருந்தன. முன்னைய LKNOG நிகழ்வுகளின் வெற்றியைத் தொடர்ந்து, நேரடி நிகழ்வாக, வலையமைப்பு நிபுணர்கள் பெருமளவானோரை இந்நிகழ்வு கவர்ந்திருந்தது.