Home » பாங்கசூரன்ஸ் செயற்பாட்டாளர்களை கௌரவித்தது யூனியன் அஷ்யூரன்ஸ்

பாங்கசூரன்ஸ் செயற்பாட்டாளர்களை கௌரவித்தது யூனியன் அஷ்யூரன்ஸ்

by Damith Pushpika
September 29, 2024 6:21 am 0 comment

இலங்கையின் முன்னணி ஆயுள் காப்புறுதி சேவைகளை வழங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், அதன் பிரத்தியேக பாங்கசூரன்ஸ் பங்காளரான நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி பிஎல்சி உடன் இணைந்து, வங்கியின் பாங்கசூரன்ஸ் அணி மற்றும் கிளை வலையமைப்பின் ஊழிய அங்கத்தவர்களின் சிறந்த செயற்பாடுகளை கௌரவிக்கும் விசேட அபிவிருத்தி நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்வுகளில், யூனியன் அஷ்யூரன்ஸ் மற்றும் நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி ஆகியவற்றின் சிரேஷ்ட முகாமைத்துவத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றதுடன், பிரதான வியாபார பங்காளர்களுடன் தனது உறவை வலிமைப்படுத்துவதற்கான யூனியன் அஷ்யூரன்ஸின் அர்ப்பணிப்புக்கான எடுத்துக்காட்டாக இது அமைந்திருந்தது.

இந்த அபிவிருத்தி மற்றும் அணி கட்டியெழுப்பும் நிகழ்வுகளில் 200 க்கு அதிகமான சிறப்பாக செயலாற்றியிருந்த வங்கியின் ஊழியர்கள் பங்கேற்றிருந்தனர். Weligama Bay Marriott Resort & Spa மற்றும் Hikka Tranz by Cinnamon ஆகியவற்றில் நடைபெற்ற இந்த நிகழ்வுகளினூடாக, ஈடுபாட்டுடன் கூடிய அறிவூட்டும் அமர்வுகளில் பங்கேற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம பங்காண்மை விநியோக அதிகாரி வத்சலா அளுத்கெதர இந்த நிகழ்ச்சி தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில், “நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியுடன் நாம் நீண்ட காலமாக பேணி வரும் பங்காண்மையினூடாக, நாடு முழுவதையும் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு பரிபூரண நிதிப் பாதுகாப்பைப் பெற்றுக் கொடுப்பதில் யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனத்துக்கு பக்கபலமாக அமைந்துள்ளதுடன், தேசத்தில் முன்னணி பாங்கசூரன்ஸ் சேவை வழங்குநர் எனும் எமது நிலையை உறுதியாக பேணவும் பங்களிப்பு வழங்கியிருந்தது.” என்றார்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Sajeewan Prasad – 0777861202
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division