35
ம்ஹூம் ம்ஹூம் ம்ஹூம்
நேரநெடுகையில் அடுக்கிக் கொள்ளும்
நினைவெல்லாம் நீ தான்
அந்த ஜோதியாய் நீந்தும்
வெண்ணிலவு போலவே
எந்தன் நாள் பொழுதின் ஜோதியாய்
உந்தன் கரம் சேர வேண்டும்
காணா உறவே
கனவாகி தொடர்வதேனோ
நிஜமாகிட தான் ஏனிந்த தாமதமோ
வருவாயோ வாசனைப்பூவின்
வாசனை சூடிட்ட காற்றைப்போலவே
நீ வாராயோ என்றும் நேசம் தாராயோ
சஹ்னாஸ் பேகம் முதலைப்பாளி, புத்தளம்