ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பு நிறைவுற்றதையடுத்து நேற்று (21) இரவு 10 மணி முதல் இன்று (22) காலை 06 மணி வரை நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கமைய நேற்றும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. தேர்தல் வாக்களிப்பு நடவடிக்கைகள் சுமுகமாக நடைபெற்று நாட்டில் அமைதியான சூழ்நிலை நிலவும் நிலையிலும் பொதுமக்களின் மேலதிக பாதுகாப்பை கருத்திக்கொண்டு இவ்வாறு ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
அத்தியாவசிய சேவைகள் நிமித்தம் செல்பவர்கள் தமது கடமைநேர அடையாள அட்டையை உபயோகித்து அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியுமென்றும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பும் நேற்று ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ளது.
ஸாதிக் ஷிஹான்