Home » தேர்தல் பிரசார நடவடிக்கைகள் 18 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவு

தேர்தல் பிரசார நடவடிக்கைகள் 18 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவு

தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு

by Damith Pushpika
September 15, 2024 8:45 am 0 comment

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அனைத்து பிரசார நடவடிக்கைகளும் எதிர்வரும் 18ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவுபெற வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதன் பின்னர், எந்தவொரு தேர்தல் பிரசார நடவடிக்கைகளையும் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது..

அரச அல்லது தனியார் வாகனங்களில் வேட்பாளர்கள் மற்றும் கட்சிகளை ஊக்குவிக்கும் வகையில் ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கர்கள் மற்றும் துண்டுபிரசுரங்கள் போன்றவற்றை அகற்றுவதற்கு பொலிஸாருக்கு அதிகாரமுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகளுக்கு 06 வார கால அவகாசம் வழங்கப்பட்டதாகவும், எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர், 48 மணிநேரத்துக்குள் அனைத்து பிரசார நடவடிக்கைகளும் நிறுத்தப்படவேண்டுமெனவும் தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division