நான் கல்லாக
இருந்தாலும் பரவாயில்லை
பிறர் விரும்பும் சிற்பமாய்
இருக்க விரும்புகின்றேன்
நான் மண்ணுக்குள்
மறைந்திருந்தாலும் பரவாயில்லை
ஜொலிக்கும் வைரமாக
இருக்க விரும்புகின்றேன்
நான் விதையாக
இருந்தாலும் பரவாயில்லை
வளரும் விருட்சமாய்
இருக்க விரும்புகின்றேன்
நான் மண்ணாக
இருந்தாலும் பரவாயில்லை
மரங்களுக்கு உரமாக
இருக்க விரும்புகின்றேன்
நான் கண்காணா
காற்றாக இருந்தாலும்
பரவாயில்லை
சுவாசிக்கும் ஒக்சிஜனாக
இருக்க விரும்புகின்றேன்
நான் தொலைதூர வானமாக
இருந்தாலும் பரவாயில்லை
விண்மீன்கள் விளையாடும்
விரிப்பாக
இருக்க விரும்புகின்றேன்
நான் இருளாக
இருந்தாலும் பரவாயில்லை
இராத் தூக்கத்தின் தொட்டிலாக
இருக்க விரும்புகின்றேன்
நான் இமையாக
இருந்தாலும் பரவாயில்லை
இருகண்களையும் காக்கும்
கவசமாக இருக்க
விரும்புகின்றேன்
நான் துளியாக
இருந்தாலும் பரவாயில்லை
பசுமை துளிரும்
மழைத்துளியாக
இருக்க விரும்புகின்றேன்
நான் ஜடமாக
இருந்தாலும் பரவாயில்லை
பிறருக்கு வழிகாட்டும் ஜோதியாக
இருக்க விரும்புகின்றேன்
நான் மனிதனாக
இருந்தாலும் பரவாயில்லை
மனிதம் காத்த புனிதனாக
மரணிக்க விரும்புகின்றேன்
-ஷஹாமா ஸனீர் சீனன்கோட்டை