அசைவுகளை ஒவ்வொன்றாக இரசித்தேன்
குறும்புக்கார குழந்தை அவள்.
கண்ணாடி வளையலணிந்து சமைக்கையில்
அவ்வோசையும் இசையென இரசித்தேன்.
ஒலி எழுப்பாத மெல்லிய சலங்கை
கால்களிலணிந்தவள்
நடக்கையில் தென்றலின்
ஓசையை இரசித்தேன்.
மை பூசா அவள்
கருவிழிகள் காண்கையில்
கார்மேகம் சூழ்கையில் வரும் தென்றல்போல்
இன்பத்தை உணர்கையில்
வியப்பில் இரசித்தேன்
காற்றில் அசையும் உன் கூந்தல்
சில நேரம் எனக்கு தலைதுவட்ட
வருவதை ரசித்தேன்.
எனக்காக நீ அழுகையில்
உன் கன்னத்தில் படும் கண்ணீர் துளிகளை
இரசிப்பதாயென்றறியாமல் இரசித்தேன்.
விடைதேடிய பயணத்தில்
மேலுமொறு வினாவாக வந்தவள் நீ.
பார்வையில் இருந்து விலகியே
இரு பதில் கூற மறுத்த காரணத்தால்…….
தீராக்காதலன் பர்ஷாத் மஹ்தி பொத்துவில்