ஜனாதிபதித் தேர்தலின்போது வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்லும் வாக்காளர்கள் கையடக்கத் தொலைபேசிகளை எடுத்துச்செல்வது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இவ்வாறான தடை அமுலில் இருக்கும்போதே, தபால் மூல வாக்களிப்பின்போது, வாக்குச் சீட்டை படமெடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றிய சம்பவம் தொடர்பாகவும் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், வாக்களிப்பு நிலையங்களுக்குக் கையடக்கத் தொலைபேசியை எடுத்துச்செல்லகூடாதென ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த தடையை, மேலும் கடுமையாக அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டிருப்பதாவும் அவர் தெரிவித்துள்ளார்.
வாக்களிப்பு நிலையங்களுக்கு
கையடக்கத் தொலைபேசி எடுத்துச் செல்வது தடை
111