ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் இதுவரை கிடைக்காதவர்கள் எதிர்வரும் 18 ஆம் திகதி புதன்கிழமை முதல் 21 ஆம் திகதி சனிக்கிழமை வரையான காலப்பகுதியில், அருகாமையிலுள்ள தபால் அலுவலகங்களில் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தி தமது வாக்காளர் அட்டையை பெற்றுக்கொள்ள முடியுமென சிரேஷ்ட பிரதி தபால் மாஅதிபர் ராஜித ரணசிங்க குறிப்பிட்டுள்ளார். உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணி நேற்றுடன் நிறைவடைந்துள்ளதாகவும் இதுவரை, 84 வீத உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் சிரேஷ்ட பிரதி தபால் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார். கடந்த 03 ஆம் திகதி முதல் வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டு வந்தமையும் குறிப்பிடத்தக்கது.
வாக்காளர் அட்டை கிடைக்காதோர்
18 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை தபால் அலுவலகத்தில் பெறமுடியும்
79
previous post