Home » அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு ரூ.7,500
சீருடை மற்றும் ஊக்குவிப்பு கொடுப்பனவு

அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு ரூ.7,500

2025 முதல் வழங்க அமைச்சரவை அங்கீகாரம்

by Damith Pushpika
September 15, 2024 6:45 am 0 comment

பௌத்த, இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மற்றும் கத்தோலிக்க அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு, 2025 ஆம் ஆண்டு முதல் ஊக்குவிப்பு கொடுப்பனவு மற்றும் சீருடைக்கென 7,500 ரூபாவை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

புத்தசாசன, மத விவகார, கலாசார அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவை கருத்திற்கொண்டு, அனைத்து மதங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு சீருடை மற்றும் ஊக்குவிப்பு கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதன்படி, எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு முதல், 5,000 ரூபா ஊக்குவிப்புக் கொடுப்பனவு, 2,500 ரூபா சீருடைக் கொடுப்பனவு என்ற வகையில் வருடாந்தம் 7,500 ரூபா கொடுப்பனவு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பௌத்த, இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மற்றும் கத்தோலிக்க அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள் மேற்கொள்ளும் சேவையைப் பாராட்டி, அவர்களை ஊக்குவிக்கும் முக்மாக 5,000 ரூபா வருடாந்த ஆசிரியர் கொடுப்பனவு வழங்கப்பட்டு வருகிறது.

இக் கொடுப்பனவுக்கு மேலதிகமாக 2022 ஆண்டு வரை அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு சீருடை வழங்கப்பட்டது. எனினும் தற்போது சீருடை வழங்கும் திட்டம் அமுல்படுத்தப்படவில்லை.

இந்நிலையிலேயே அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு சீருடை வழங்குதல் மற்றும் ஊக்குவிப்பு கொடுப்பனவாக 7,500 ரூபாவை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division