Home » வடக்கு ரயில் சேவைகள் நேற்று முதல் வழமைக்கு
ரூ. 3,000 கோடி செலவில் புனரமைக்கப்பட்ட

வடக்கு ரயில் சேவைகள் நேற்று முதல் வழமைக்கு

by Damith Pushpika
September 15, 2024 6:00 am 0 comment

நாட்டில் வழமையான மற்றும் வினைத்திறன்மிக்க போக்குவரத்து சேவையை நிறுவும் நோக்கில், 3,000 கோடி ரூபா (92 மில்லியன் அமெரிக்க டொலர்) செலவில் புனரமைக்கப்பட்ட அநுராதபுரம் – மஹவ ரயில் பாதை, கடந்த 12 ஆம் திகதி ரயில்வே திணைக்களத்திடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

இந்திய அரசாங்கத்தின் கடன் திட்டத்தின் கீழ், நடைமுறைப்படுத்தப்பட்ட வடக்கு ரயில்வேயின் புனரமைப்பு பணிகள் மூன்று கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டதோடு, அனுராதபுரம் – ஓமந்தை, அனுராதபுரம் — மிஹிந்தலை மற்றும் அனுராதபுரம் — மஹவ என அபிவிருத்தி செய்யப்பட்டதாகவும் தற்போது புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ள அனுராதபுரம் -மஹவ பகுதியை கையளித்துள்ளதாகவும் திட்டப்பணிப்பாளர் சிந்தக ஜயசேகர தெரிவித்தார்.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தலைமையில், அனுராதபுரம் – மஹவ பகுதியின் நிர்மாணப் பணிகள் இவ்வருடம் ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த ஒரு தடத்தை கொண்ட ரயில் பாதை புனரமைக்கப்பட்டதன் பின்னர், கொழும்பிலிருந்து காங்கேசந்துறைக்கு செல்வதற்கு ஏழரை மணிநேரம் தேவைப்பட்டது. பாதை புனரமைப்பின் பின்னர் ஐந்தரை மணிநேரமாக குறைக்கப்படுமெனவும் மணிக்கு 100 கிலோ மீற்றர் வேகத்தில் ரயில் பயணிக்குமெனவும் சிந்தக ஜயசேகர மேலும் தெரிவித்தார்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Sajeewan Prasad – 0777861202
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division