நிதியியல் சுதந்திரத்தை வளர்ப்பதற்கும், நாட்டின் இளைஞர்களிடையே சேமிப்புக் கலாசாரத்தை ஊக்குவிப்பதற்கும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, NDB வங்கியானது அதன் சமீபத்திய சலுகையான “NDB Pixel” ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதுமையான எண்ணிம கணக்கானது 13 முதல் 18 வயதுடைய பதின்ம வயதினருக்காக வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களின் எதிர்காலத்திற்கான வலுவான நிதியியல் அடித்தளத்தை உருவாக்குவதற்கான வளங்களையும் உதவியையும் இதன் மூலம் அவர்களுக்கு வழங்குகிறது.
NDB Pixel ஆனது அது ஒரு எண்ணிய கணக்கு என்பதற்கும் அப்பாலானதாகும். இது இளம் இலங்கையர்களின் நிதியியல் அறிவை வளர்ப்பதனை நோக்கி ஒரு அடி முன்னோக்கி செல்கின்றது. NDB வங்கியானது வெறுமனே ரூ. 5,000 எனும் ஆரம்ப வைப்புத்தொகையுடன், இளைய தலைமுறையினருக்கு அவர்களின் எதிர்காலக் கல்வித் தேவைகளில் குறிப்பிட்ட கவனம் செலுத்தி, சேமிப்பு ஒழுக்கத்தையும் பழக்கத்தையும் ஏற்படுத்த எதிர்பார்க்கிறது. அவர்களின் நிதிகளை பொறுப்புடன் நிர்வகிப்பதற்கான அறிவு மற்றும் வழிமுறைகளை அவர்களுக்கு வழங்குவதன் மூலம், NDB வங்கி அவர்கள் மிகவும் பாதுகாப்பான மற்றும் வளமான எதிர்காலத்தை நோக்கி நகர்வதற்கான வழியை அமைத்துக்கொடுக்கிறது.
NDB Pixel இன் நன்மைகள் பதின்ம வயதினரின் தனிப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள அதே வேளை அவை அதிக வட்டி வீதங்களையும் வழங்குகின்றன.