E.B. Creasy & Co., PLC நிறுவனத்தின் புதுப்பிக்கத்தக்க வலு பிரிவான E.B. Creasy Solar, சூரிய வலுத் துறையில் சர்வதேச முன்னோடியான SUNGROW உடன் மூலோபாய பங்காண்மையை ஏற்படுத்தியுள்ளது. 2024 செப்டெம்பர் 10 ஆம் திகதி இந்த மைல்கல்லை பதிவு செய்ததுடன், இந்த கைகோர்ப்பினூடாக, இலங்கையில் SUNGROW Solar Inverterகளின் உத்தியோகபூர்வ விற்பனை மற்றும் சேவை பங்காளராக E.B. Creasy Solar ஐ நியமித்துள்ளது. அதனூடாக, நிலைபேறான எதிர்காலத்துக்கு நவீன சூரிய வலுத் தீர்வுகளை அறிமுகம் செய்து வாடிக்கையாளர் தன்னிறைவை மேம்படுத்த முன்வந்துள்ளது.
சூரிய வலுக் கட்டமைப்புகளின் வினைத்திறனை மேம்படுத்தக்கூடிய வகையில் SUNGROW Inverters வடிவமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்றிணைக்கப்பட்டுள்ள தொழில்நுட்பங்கள் மற்றும் பாவனையாளருக்கு நட்பான ஆற்றல்கள் போன்ற பல அம்சங்கள் காணப்படுகின்றன. ஒவ்வொரு சூரியக் கதிரும் வினைத்திறனாக பயன்படுத்தப்படுவதை SUNGROW Inverter உறுதி செய்து, பெருமளவு வலுச் சேமிப்பு மற்றும் பாவனையாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட வினைத்திறனையும் உறுதி செய்யும். அதன் பிரத்தியேகமான அலங்காரத்தினூடாக தொழில்நுட்பத்தின் பரந்த தன்மை வெளிப்படுத்தப்பட்டுள்ளதுடன், பாரியளவு வணிக பொருத்துகைகள் அடங்கலாக, பல்வேறு பிரயோகங்களுக்கு பொருத்தமானதாக அமைந்திருக்கச் செய்துள்ளது. அசாதாரண வானிலை மாற்றங்களுக்கு பொருத்தமான வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த inverter, நீண்ட கால பாவனைக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.