AIA இன்ஷூரன்ஸ் இலங்கையில் மிகவும் விரும்பப்படும் ஆயுள் காப்புறுதி வர்த்தக நாமங்களில் ஒன்றாக தனது அங்கீகாரத்தை அறிவிப்பதில் மிகவும் பெருமிதம் கொள்கின்றது. இதற்கான கருத்தாய்வினை முன்னெடுப்பதற்காக நியமிக்கப்பட்ட பெபர்கியூப் கென்சல்டன்ஸ் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டிருந்த பரிபூரணமான தரவின் அடிப்படையில் AIA இனால் வழங்கப்பட்ட இப்பாராட்டானது AIA இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் மிகவும் குறிப்பிடத்தக்க முக்கிய மைல்கல்லினை அடையாளப்படுத்துகின்றது.
எங்களின் மிகச்சிறந்த அர்ப்பணிப்பினால் இப்பயணம் வழிகாட்டப்படுவதுடன் எங்கள் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் அசைக்க முடியாத கவனத்தினையும் செலுத்துகின்றது. (பெபர்கியூப் கென்சல்டன்ஸ் நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்ட கருத்தாய்வின் அடிப்படையில் AIA ஆல் தொகுக்கப்பட்ட தரவுகளின்படி) பெருநிறுவன வர்த்தக நாமப் பிரிவில் மிகவும் விரும்பப்படும் காப்புறுதி வழங்குநராக AIA பெயரிடப்பட்டுள்ளதானது இலங்கையர்கள் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை மற்றும் அதிகப்படியான அன்பிற்கான சான்றாகவே உள்ளது. எங்கள் காப்புறுதிதாரர்களுக்கு இணையற்ற சேவை மற்றும் ஆதரவை வழங்குவதற்கான எங்கள் முயற்சிகளின் சரிபார்ப்பானது அவர்களின் நிதிப் பாதுகாப்பு மற்றும் மன நிம்மதியினை மிகவும் உறுதி செய்கின்றது.
“இலங்கையில் உள்ள அனைவரும் எங்கள் மீது மிகுந்த அன்பினைப் பொழிவதற்கு நாங்கள் உண்மையிலேயே மிகவும் பாக்கியம் பெற்றவர்களாகவே எங்களைக் கருதுகின்றோம்” என AIA இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் பிரதான சந்தைப்படுத்தல் அதிகாரி சசித் பம்பரதெனிய கருத்துத் தெரிவித்திருந்திருந்தார்.