நியூசிலாந்தில் ஆரம்பகாலத்தில் வாழ்ந்த பறக்க முடியாத மிகப்பெரிய பறவை இனமே Moa. இவை தற்போது அழிந்துவிட்டாலும், இவற்றின் வரலாறு மற்றும் முக்கிய தன்மைகள் நியூசிலாந்தின் வன உயிரின ஆவணங்களில் பதியப்பட்டுள்ளன.
Moa பறவைகளில் ஒன்பது வகைகள் இருந்துள்ளன. அவை பெருமளவில் அளவுகளில் மாறுபட்டவை. மிகப்பெரிய Moa Dinornis வகையானதாகும். ஆண் பறவையின் உயரம் சுமார் 12 அடியும் அதன் எடை 230 கிலோ வரையும் இருக்குமாம். இவை இராட்சத ஒஸ்ட்ரிச் மற்றும் எமு போன்ற பறவைகளுடன் ஒப்பிடும் அளவு கொண்டவை, ஆனால் Moa பறவைகளின் ஒரு சிறப்பான தன்மை அதனால் பறக்க முடியாது.
வரலாற்றில் மிக முக்கியமான ஒரு அத்தியாயமாக சுமார் 13-15 ஆம் நூற்றாண்டில் மனிதர்கள் நியூசிலாந்துக்கு வருகை தந்த பிறகு, இப் பறவைகள் பெருமளவில் வேட்டையாடப்பட்டன.
இதனால் அவை முழுமையாக அழிந்துவிட்டன. மனிதர்கள் மட்டுமன்றி, மனிதர்கள் கொண்டுவந்த ஒற்றை ஈன்றில் மிருகங்களும் Moa முட்டைகளை மற்றும் குட்டிகளை அழிக்கச் செய்தன. இதனால் Moa பறவைகள் விரைவில் அழிந்து விட்டன.
இவை நியூசிலாந்தின் ஒரு காலத்தில் நிலைத்திருந்த மர்மத்தையும் வனப்பையும் குறிக்கும் ஒரு உதாரணமாகும். இப்பறவைகள் அழிந்து விட்டாலும், இதன் அழிவடைந்த பாகங்கள் அகழ்வாராய்ச்சி மூலமாக, இவற்றின் வாழ்க்கை முறைகள் மற்றும் அவை நியூசிலாந்தின் பருவ நிலைகளுடன் எவ்வாறு ஒத்துப்போனது என்பதையும் அறிய முடிகிறது. இப் பறவைகள் 1500-ஆம் ஆண்டுகளில் வாழ்ந்ததாக குறிப்பிடப்படுகிறது.
அங்குள்ள மௌரி மக்களின் கூற்றுப்படி இந்த பறவைகள் பல வழிகளில் அழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 20ஆம் நூற்றாண்டின் போது ஆராய்ச்சியாளர்களால் இதன் காலின் ஒரு பகுதி கண்டறியப்பட்டது, அவர்கள் அந்த காலை பதப்படுத்தி இன்று வரை பாதுகாத்து வருகின்றனர்.