90
சிவப்புச் சகோதர்களைப் பற்றி அவர்களின் வரலாற்றைத் திரும்பிப் பார்த்து சிந்திக்க வேண்டும் எனவும் அவர்கள் தற்போது புதிய முக மூடிகளுடன் பிரசன்னமாகியுள்ளார்கள் எனவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
இந்த சிவப்புச் சகோதர்கள் நாட்டிலுள்ள ஊழலை ஒழிக்கப்போவதாகவும் கூறுவதாகஅவர் தெரிவித்தார்.
புத்தளத்தில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் கூட்டத்தில் உரையாற்றும்போதே முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் இவ்வாறு தெரிவித்தார்.