81
ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு அமைவான மலையக அரசியல் சாசனம் எதிர்வரும் வாரத்தில் வெளியிடப்படுமென, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று முன்தினம் (06) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது, மலையக அரசியல் சாசனத்துக்கமைய எதிர்காலத்தில் பெருந்தோட்ட மக்கள் சேவைகள் முன்னெடுக்கப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.