ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பு பொது வேட்பாளர் அரியநேத்திரனுக்கு மக்களின் ஆதரவு உள்ளதாக தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.
சங்குச் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்ப் பொது வேட்பாளர் அரியநேத்திரனை ஆதரித்து நேற்று முன்தினம் (06) யாழ். நகரப் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார நடவடிக்கையின்போது ஊடங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழரசுக் கட்சியின் சிலர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கப் போகிறார்களென அண்மையில் அறிவிப்பு வெளியானது.
தமிழரசு கட்சியின் முக்கிய நபர்கள் கலந்துகொள்ளாமல் சுமந்திரன் அணி, சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்து வெளியான அறிவிப்பு தொடர்பாக தமிழ் மக்கள் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை.
வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிக்கவே உள்ளனர். சஜித் பிரேமதாசவுக்கு சுமந்திரன் அணி வாக்களிக்குமாறு கூறியதை தமிழரசு கட்சி கூறியதாக எடுத்துவிட முடியாது என, நீதியரசர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.