தோற்றுப்போன காதல்
நேற்றின் தாக்கம்
தருகிறது
இரவுகள் வருவது தூங்கிட தானே
விழிப்புகள் வரம்பு மீறிக்கிடப்பதோ
நினைவாலே தானே
காற்றை உள்வாங்கி இசை மீட்டும்
மரங்களைப்போல
நேற்றை உள்வாங்கி
நினைவை சுமக்கிறது உணர்வு
பிடிப்பட்டவை எல்லாம்
ஒத்திகை பார்க்க தான் போகிறது
விடுதலை இல்லாத
நினைவை தந்து
செல்ல போவதிலே
தான்
எல்லாமே தொக்கி நிற்கிறது ..
அன்றை மறக்க முனைந்தால்
இன்றில் அல்லவா
செழிப்புடன் மிளிர்கிறது ..
நினைவே தூரமாகிடு
நினைப்பவை நீங்காததால்
துரிதமாக்கு நினைப்பதை நிறுத்த
வருத்தி எடுக்கும் வெறுமை கிழிக்க
வழி தேடி சலித்துக் கொள்கிறது
செழிப்பாகிடும் தனிமை
தந்த வெறுமை
வெளுத்துக் கட்டி விடத்தான் பார்க்கிறது
ஒவ்வாமையாக்கி உறவுகளகற்றி
தனிப்பதில் ஜோதியாய்
தெரிகிறது தனிமை
தனிமைக்கெதற்கு தனித்துவம்
தெறித்தோட
தனிமைக்கு
கொடுக்காதீர் இனிமை
பொறுமையோடு கையாண்டு
பொறுத்திடுவீர்
பொறுமையாளன் தருவான்
தனித்துவமாய் வாய்ப்பொன்று